27 February 2018

கொஞ்சம் நிள்ளு புள்ள



நாட்டுப்புற காதல்  கவிதை




ஒத்தயடி பாதையில
தண்ணிக் குடம் சுமந்து போரவளே,
ஒத்தாசிக்கு நானும் வரவா,

உன் நடைய பார்த்து
கண்ணுரண்டும் இமைக்க மறுக்குது,
உன் இடைய பார்த்து
குடத்துநீரை போல மனசு குதிக்குது,

அங்கிட்டு இங்கிட்டு ஏன்டி
என்னை அலைய வைக்குற,
துறட்டி போல விழிய வைச்சு
என் மனசை இழுத்துட,

அத்தை பார்த்த, மாமா கேட்ட
நான் சொல்லிகிறேன்,
கொஞ்சம் நிள்ளு புள்ள,

தாவணியா நலுவமா பார்த்துகிற,
தாலிகட்ட போற மாமனை
பார்த்த ஏன்டி பூமியை நோக்குற,
ஏசபோச்சு வருமுன பயப்புடுற,
யாரயிருந்தாலும் நான் பார்த்துகிறேன்,
கொஞ்சம் நிள்ளு புள்ள.

26 February 2018

அதிகாலை காற்றே நில்லு


 நாட்டுப்புற கவிதை




அதிகாலை காற்றே நில்லு,
அருமை மனைவிக்கிட்ட
சேதி ஒன்னு சொல்லனும்,
ஒன்பது வீட்டைத்தாண்டி பத்தாவது வீடு,
ஒலையால் மேய்ந்த வீடு,
கொஞ்சம் என்னனு கேட்டுகிட்டு போ,


அதிகாலை காற்றே நில்லு,
வைகறை முடியப் போது
வயற்காட்டுல நிற்கிறேன்,
நீராகரம் கொண்டு வர சொல்லு,
சீக்கிரம் போயி வர சொல்லு,

வரும் போது
கழனியில களையெடுக்க களைகொட்டு
கொண்டு வர சொல்லு,
காளை மாட்டையும் சேர்த்து
கொண்டு வர சொல்லு,

குயில் பாட்டை கேட்டுகிட்டே போயி சொல்லு
வாசலிலே கோலத்தை பார்த்துடு போயி சொல்லு,
முந்தனைகாரியை முடிஞ்ச சீக்கிரம் வர சொல்லு,

25 February 2018

ஆத்தங்கரை ஓரத்திலே



 நாட்டுப்புற காதல் கவிதை





ஆத்தங்கரை ஓரத்திலே,
அந்தி சாயும் நேரத்திலே,
ஊத்துதண்ணி எடுக்க போரவலே,
ஒத்தாசிக்கு நானும் வாரேன்டி,
கைமத்த முத்தம் ஒன்னு தாயேன்டி,

அந்த ஆலமரத்து அடியினிலே,
குயில் பாட்டை கேட்டுகிட்டே,
மாமன் தேளுல சாஞ்சுக்கடி,

ஆத்து காத்துல மேனி நடுங்குது,
கொஞ்சம் மூச்சு காத்த
தந்து அணைச்சு போயேன்டி,

அயிரமீனப் போல ஏன்டி நலுவுர,
முறை மாமன் தானடி
முறைச்சு பார்க்கதடி,

24 February 2018

முதுகெலும்பு


வாழ்க்கை கவிதை 


நாட்டின் முதுகெலும்பு விவசாயம்,
நாட்டின் விவசாயிகள் தெருவோரம்,
வல்லரசு நோக்கிய பயணத்துல
வாய்க்கரிசியாவது கிடைக்குமா,

சிலந்தி வலையில் சிக்கி நாடு சிரழியுது,
சிரிப்போலி சத்ததுலா அழுகுரல் கேட்கலயா,

முதுகெலும்பு முறிஞ்ச பின்னே
வளர்ச்சி எற்படுமா,
மூடர்களே கொஞ்சம்
அறிவுகண்ணை திறங்கள்,

இளையதலைமுறைகளே
ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம்,

23 February 2018

கலைஞன்



 நாட்டுப்புற கவிதை






கண்ணீர் மறைத்து கவலைகள் விடுத்து,
கலைஞன் கலைக்காகவே வாழ்வை குடுப்பான்,

ஆடாத கால்களையும் ஆட வைப்பேன்,
ஆதி முதல் அந்தம் வரை
அவனும் தொடர்ந்து வருவான்,

உச்சி முதல் பாதம் வரை
ஒப்பனை செய்தே,
ஊரேங்கும் கலைகள் செய்வான்,

ஊனில் உயிர் உள்ளவரை
உலகத்துக்கு தான் உழப்பை தருவான்,

ஆனால்
காசுக்காக ஆடியவனை
தூக்கி உயர்த்தினோம் ,
கலைக்காக வாழ்ந்தவனை
தூக்கி எறிந்தோம்,

காளைகள் காக்க ஒன்று கூடினோம்,
கலைஞனை ஏனோ காக்க மறந்தோம்,
இனியவது ஓர் வழி செய்வோம்,
இவர்களை காக்க ஒன்றுபடுவோம் ......

22 February 2018

தாயின் சிறந்த கோவிலும் இல்லை


அம்மா கவிதை 






கார் நனைக்கும் முன்பே
குடையாகி காப்பாள்,
கதிரவன் வாட்டும் முன்பே
திரையாகி காப்பாள்,
கடுங்குளிர் தாக்கும் முன்பே
ஆடையாகி காப்பாள்

தாயில்லாமல் வாழ்பவர்கள் சில பேர்,
தாயிருந்தும் மதிக்காதவர்கள் சில பேர்,

அந்த மதியற்றவர்களின் நானும் ஒருவன்,
அந்த கடவுளை வணங்காத மடையன்,
அவள் இருக்கும் குயிலாய் வாழ்ந்தேன்

உள்ளங்கை ஆயுள் ரேகை தேய்ந்தாலும்
உயிர் உள்ளவரை எனக்காக வாழ்ந்தாள்,

இருக்கும் வரை அவள் தியாகம் தெரியாது,
இறந்தபின் அவளை போற்றி பயனேது,

காக்கைகள் நடுவில் குயிலானேன்,
குரலை கேட்க ஆளில்லா அனாதையானேன்,

என் வாழ்வின்
அனுபவதில் சொல்கிறேன்,
அகிலத்தில் அவள் உள்ளவரை,
அவள் பாதம் தொட்டு வணங்கிடு.

21 February 2018

பருவக்காலம்


வாழ்க்கை கவிதை 






அரும்பு மீசையும், புரியா ஆசையும்
துளிர்த்து வரும்  காலம் அது,

முதல் காதலும், முடியா தேடலும்,
இதயத்தில் தோன்றும் காலம் அது,

நாள்தோறும் மாற்றமும், நாகரிக தோற்றமும்,
வாழ்வில் தொடங்கும்   காலம் அது,

கனவு உலகமும், கற்பனை உறவுகளும்,
மனதில் பிறக்கும் காலம் அது,

அது துள்ளி திரிந்த பருவக்காலம்,

20 February 2018

காதல் நிலவே



காதல் கவிதை 





நீரில் விழ்ந்த நிலவின் பிம்பம் போல
என் மனதில் விழ்ந்தாய்,
உன் விழியால் ஈர்த்தாய்,
என்னை முழுவதும் சாய்த்தாய்,
இதயத்தில் காதலாய் மலர்ந்தாய்,

நீராழியை ஆளும் நிலவை போல
உன் வருகையும் நினைவும்
என்னில் பெறும் மாற்றம் செய்யுதே,

நிலவில் நீரை பற்றிய ஆய்வை போல
ஓர் முடிவு தெரியாமல் நான் திணறிபோனேன்,
உன் பிறைகள் கண்டு நான் மயங்கிபோனேன்,

நிலவை சுற்றும் செய்மதியை போல
உன்னை சுற்றியே வருகிறேன் பெண்ணே,
கடல்நீரும் நிலவும் கொண்ட
காதல் தூரம் போதும் பெண்ணே,
குளிரும் பனியுமாய்
காதல் கொள்ள பதில்சொல் பெண்ணே.........

19 February 2018

தாயுமானவளே


அன்பு கவிதை 







எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாயே,

என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாயே,

முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாயே,

சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாயே ,

என்னை காக்கவே - தாயே
பூமிக்கு மீண்டும் வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
புண்ணியம் என்ன செய்தேனோ,

இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,

தேவதைக்கு தேவதையாக பிறந்தயே,
என் தாயுமானவளே.............

18 February 2018

அன்னை தெரசா


அன்பு கவிதை 




அன்பை அள்ளி தந்த அன்னையே ,
அன்பின் கடிதத்தை எழுதிய இறைவனின் கைகளே,
அரக்கனையும் அடிபணியவைக்கும் குணத்தவளே,
ஒதுக்கப்பட்டவர்களையும் அரவணைத்த போரொளியே,
கயமையிருளை விலக்க வந்த சுடரொளியே,
துயரில் வடியவர்களை தூக்கிவிட்ட துயவளே,
தீண்டாமையென்னும் கொடியநோயை விரட்ட வந்த சக்கியே,
புன்னெறி கொண்டவர்களையும் தூய்மையாக்கிய புனிதவளே,
தனக்கென்று வாழாமல் தொண்டிற்கே தன்னை அர்பணித்த தாயே,
கருணை கடலே அன்னை தெரசவே  உன்னை வணங்குகிறேன் ……………….


17 February 2018

நீயின்றி நானேது

காதல் கவிதை 






நீரின்றி உலகேது,
நீயின்றி நானேது,
நீயில்லா என்வாழ்வில் பொருள்யாது?
நித்தமும் உன்நினைவு என்னுள்ளே,
நிழலும் வரமறுக்கிறது என்பின்னே,

அன்பு மழை பொய்த்துவிட்டதா - ஏன்
கண்ணீரால் காப்பாற்ற முயல்கிறாய்
என்னிதயத்தை,
ஒர்துளி காணும் போதே இறந்துவிடும்
என்பதை மறந்துவிட்டயா,

இதயம் கணத்துவிட்டதா - ஏன்
இறக்கிவைத்துவிட்டாய் பெண்ணே?
இறந்துவிடும் என்று தெரிந்தும்
இரக்கமில்லையா ,

கண்ணில் தோன்றி கண்ணீரில் முடியும்
காட்சியோட்டமா என்காதல்?
கண்ணில் தோன்றி இதயத்தில் வாழும்
உயிரோட்டமே என்காதல்,

நீரில் வாழ்ந்த நம்மை
நிலத்தில் தூக்கி எறிந்தவர் யார் பெண்ணே?
கவலையில்லை எனக்கு
நம்காதல் மழையை கொண்டு
நம்மை சேர்க்கும் பெண்ணே........... 

16 February 2018

புதியதோரு விடியலைத் தேடி


தன்னம்பிக்கை கவிதை :  புதியதோரு விடியலைத் தேடி





பணத்தை தவிர வேறு
குறையில்ல கூரைவிட்டு பெண்,
இன்னும் குழந்தையாக பார்க்கும்
பெற்றோர் பெற்ற பெண்,

மலராயிருந்தும் கனவு கண்டேன்
மனம் போல் வாழ்க்கை அமையுமென்று,

சருகாய் மாற்றி கனவை ஏரிக்கின்றேன்
வாழ்வை பணம்தான் முடிவு செய்கிறது என்று,

இதயக்கூட்டில் கறையிருந்தால்
ஏற்றுக்கொள்கிறேன்,
ஏழைவீடே குறையென்றால்
எங்கே சென்று முறையிடுவேன்

புலம்பியெதும் பயனில்லை
புறக்கணிக்கும் சமூகத்தில்,
முடங்கிக்கிடப்பதால் பலனுமில்லை
மிதிக்கும் இந்த உலகத்தில்,


உள்ளத்தில் உறுதியிருக்கு,
உழைப்பில் நம்பிக்கையிருக்கு,
கையில் வலுவிருக்கு,

பாரதியின் புதுமை பெண்ணாக
எடுத்துவைக்கிறேன் முதல் அடியை
புதியதோரு விடியலைத் தேடி........ 

15 February 2018

தமிழ்த்தாய் திருவடி


தமிழ்த்தாய் கவிதை : தமிழ்த்தாய்                                                           திருவடி 


எத்தனை கோடி மொழிகள் கலந்தாலும்

எத்துணை இன்றியும் நீ நின்றிடுவாய்,

எத்தனை யுகங்கள் கடந்தாலும்

அத்தனை யுகங்களும் நிலைத்துடுவாய் ,



செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து

தீந்தமிழ் நேசன் வழி  நடந்து

திசையெங்கும் தித்திக்கும் கவி

நான் பாடிடவேண்டும்,



செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து

தீந்தமிழ் தாசன் வழி  நடந்து

ஊர்யெங்கும் புரட்சிகவி

நான் படைத்திடவேண்டும்,



எட்டுதிக்கும் உன்புகழ் பாடவேண்டும்,

எழுகின்ற பிறப்பெல்லாம்

என்னை நீ சுமக்க வேண்டும்

இல்லையென்றால்   இனி

எழமாலே உன் திருவடி சேரவேண்டும்....

14 February 2018

அம்மு


காதல் கவிதை : அம்மு

என் அம்முகுட்டியே!
உன்னை நான் நேசித்தேன் உயிராக,
உலகையே வெல்வேன் உனக்காக,
உறக்கத்தில் கூட இருப்பேன் நேர்மையாக,
என்னிதய வானில் என்றும் இருப்பாய் நீ முழுமையாக,

நம்காதல் சொல்லவா
உன்காதில்  மெதுவாக,
ஒர்காதல் கோட்டை
கட்டவா நமக்காக ,

அடியே! என்றும்
என் அன்பின் ஆழம்யறிய முயலாதே,
உன் நிழலையும் சுமப்பேன் மறவாதே,

என்வாசல் வழியே வலதுகால் வைத்து வருவாயா,
என் இதயத்தில் ஏற்றிய தீபத்தை அங்கே ஒளிர செய்வாயா........

13 February 2018

வெளிநாட்டு வாழ் இளைஞன்


இயற்கை கவிதை : வெளிநாட்டு வாழ்                                                   இளைஞன்

முன்னோர் வாழ்ந்த ஊர்,
முப்போகம் விளைந்த ஊர்,
சிறுவயதில் வந்தது,
சிறுசிறு மீன்கள் பிடித்து விளையாடியது,
பசுமைமாறா நினைவுகள் கொண்டது,

பலவருடம் கழித்து வந்தேன்,
இரவுநேர பயணம்,

நதியில் மீன் பிடிக்க
நண்பகலில் சென்றேன்,
வலையை மறந்தேன் என்று
நடுவழியில் தோன்றியது,


துரத்தில் ஒர் வீடு,
தென்னை ஒலையால் மேய்ந்த வீடு,
திண்னையில் ஒர் ஆடு - அதன்
அருகில் மீன் வலை,

திரும்பி சென்றால் வெகுநேரம்
எடுத்து வந்தால் சிலகணம்,

எடுத்தேன் வலையை
திகில் உடன்
திரும்பி கூட பார்க்கமால்
வேகமாக நடந்தேன்,

நதி அருகில் செல்ல செல்ல
தென்றல் தீண்டியது,
நாடி நரம்பு சிலிர்த்தது,

நதிமேடு, அதில் ஏறி நின்றேன்,
சுடுகாடு போல் அமைதி கண்டேன்,

பாதையெல்லாம் பள்ளம்,
பார்க்கும் தூரமெல்லாம் பள்ளம்,

கரைபுரண்டு ஒடியது தண்ணீர் அன்று
கண்ணில் மட்டுமே நீர் இன்று.....

12 February 2018

தேவதை


காதல் கவிதை : தேவதை



மாலைப் பொழுதினிலே
தேரடி வீதியில்
அவளைக் கண்டேன்,

மேகக்கூட்டங்களில் இருந்து வரும் ஒளிப் போல்
சட்டென நெஞ்சில் நுழைந்துவிட்டாள்,
பட்டென உயிரில் கலந்துவிட்டாள்...

தாரணியில் வந்த தேவதையே
தாவணியின் அழகைக் காண
இருகண்கள் போதுமா

மெல்நடை கொண்ட அன்னமே
கொசுவத்தின் எடையை
மெல்லிடை தாங்குமா

என்னை கவர்ந்தது ஏதோ;
கையில் குலுங்கும் வளையலோ,
காலில் இசைக்கும் கொலுசொலியோ,
காதோரத்தில் விளையாடும் கம்மலோ,
முகமதில் பதித்த மூக்குத்தியோ,
மேனியில் படர்ந்த தாவணியோ,
வேணியில் சூடிய மல்லிகையோ,

கண்டும் காணாமல் செல்லும்
அவள் இருவிழியசைவுகளிலே
என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாள்,

தமிழில் அழகியில் வார்த்தைகள்
ஒவ்வொன்றாக கோர்த்து என்னிதயம்
அவளிடம் தரச்சொல்லுதே - இல்லையென்றால்

தமிழ் என்று ஒற்றை வார்த்தையாவது
சொல்லச் சொல்லுதே...........

11 February 2018

இலக்கை நோக்கி ஓடு

நதி போல ஓடு, 
கடலை நோக்கி ஓடு,
அணை தடுத்தால் என்ன
முயற்சி மழையை பொழிந்து
கொண்டே ஓடு,

ஓடையாக  தேங்கி
சக்கடையாக மாறாதே
இலக்கை நோக்கி ஓடு, 

இணை நதிகளை
துணை கொண்டு, 
இலக்கை நோக்கி ஓடு

வள்ளுவர் வாக்கு பொய்யாகது
முயற்சி திருவிணையாக்கும்
மெய்வருத்த கூலி உண்டு
இலக்கை நோக்கி ஓடு.....

10 February 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன்


வாழ்க்கை கவிதைநான்  ஒர் பட்டதாரி                                                      இளைஞன் 


வாழ்வினில் துன்பம் யாதனெயறிய
சின்னஞ்சிறு பறவையாய்
சேட்டை செய்து வாழ்ந்தேன்,,

மேற்படிப்பில் நுழைந்தேன்,
வாழ்வை ரசித்தேன்,
புத்தகயறிவை புத்தில் வைத்தேன்,
ஆனால் ஏனோ உலகயறிவை கற்கமறந்தேன்,,

கூட்டைவிட்டு குருவிகளாய்
சேர்ந்து சென்றோம்,
உணர்வை உணர்ச்சியை அடக்கி
உறங்கும் நேரம் குறைத்து,
ஒயமால் உழைத்தேன்,
ஒருவருடம் கடந்தேன்,,

மறுநாளே வெளியில் செல்ல
நிர்வாகம் என்னை தள்ள
தடுமாறி போனேன்,,

நூலறுந்த பட்டமாகி
காற்றின் திசையில் பறந்தேன்
முள்ளில் சிக்கி சிதைந்தேன்,,


கண்களில் கண்ணீர் தெரியமால்
கண்ணுக்குள் கனவை உடைத்தேன்,
அந்திக்குள் திரும்பதா பறவை போல
நான் மாட்டிகொண்டேன் ,,

ஆனால்.....
இறக்கையில் வலுவிருக்கு,
இன்னும் நம்பிக்கையிருக்கு,
விடியும்வரை போரடுவேன்,
விழமால் நிலைத்திருப்பேன்......

9 February 2018

தாயுமானவன்

சிற்பிக்குள்ளே என்னை
முத்தாய் வளர்த்தாய்,
சிற்பியாகி சித்திரை
நிலவாய் ஒளிரச்செய்தாய்,

அல்லல் என்னை தீண்டாமல்
அல்லும் பகலும் காத்தாய்,
அடுக்களையில் அடைக்காமல்
அஞ்சுகமாய் பறக்கச்செய்தாய்,

கவலையெனும் சிலந்தி வலையில்
சிக்கமால் வாழ்வின் வழிகளை
சீர்மைபடுத்தி தந்தாய்,

அறவழியில் சென்றிட
ஆசனாகி அறிவுரைகள் கொடுத்தாய்,

தோல்வியால் துவண்டால்
தோழனாகி தோள் கொடுத்து நிற்பாய்,

எத்தவம் முற்பிறவில் செய்தேனோ
தாயுமாகி என்னை சுமக்கின்றாய்,

இனி எத்தனை பிறவி எடுத்தாலும்
உன்மகளாக நான் பிறக்கவேண்டும்
இல்லையென்றால் நான்
உனக்கு தாயகா பிறக்கவேண்டும்………………

8 February 2018

அன்பே கடவுள்


அன்பே கடவுளடா  
ஆத்திகம் என்பதும், நாத்திகம் என்பதும், 
அவரவர் பார்வையிலடா,

ஏகன் என்பதும், அனேகன் என்பதும் , 
கடவுளின் பிம்பமடா

பிணத்தை மிதித்து 
கடவுளை காண்பதா!!! 
என்ன புண்ணிய கணக்குடா,

கீழே உள்ளவரை 
மேலே உயர்த்தினால் 
நீயும் கடவுளடா,  

அண்ணைய துறந்து, 
திண்ணையை வணங்குவது 
என்ன அர்த்தமடா,

அரசமரத்தை வெட்டி , 
ஆயிரம் முறை சுற்றுவது 
என்ன நம்பிக்கையில்டா, 

குழந்தை பேச்சில் கரையாதவன் 
கடவுளை காண ஒடுவா, 
குழந்தை முகத்தில் கடவுளைகாண்பவன் 
கடமையாற்றும் வழி செல்வான்.

அன்பே கடவுளடா  ...........



............................      ... .........      . ......... செநா 


7 February 2018

என்னுயிர் தோழி ..........



உன்உயிராய் நானிருக்க, 
உன்நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்? 
என்உயிராய் நீயிருக்க, 
என்நலன் மீது எனக்கு அக்கறை ஏன்? 
தோழியே!! 
தோள்மீது கைப்போட்டு, 
தோழமையாய் நடைப்போட்டு, 
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க, 
சுதந்திர பறவையாய் சுற்றுவோம்…….. 
தேயாத மதியே!! மதி கொண்டு
தற்காலிக குருடனை மாற்றுவோம், 
விதி என்று பிறவி குருடனுக்காக 
                 இறைவனிடம்  வேண்டுவோம் ……………
             
                                    ..... செநா 

6 February 2018

மதி ..........


அடியே! 
ஒற்றை நிலவே 
வானிலிருந்து வந்தது ஏனோ? 
என் கண்ரெதிரே வந்து 
என் இதயத்தை மட்டும் 
திருடி சென்றது ஏனோ? 

கண்ணில் தென்படும் 
யாவையும் ரசித்தவன் 
வானில் உன்னை தவிர 
யாரும் தெரியவில்லையே! 

கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை 
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ? 
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?

5 February 2018

தேவதை .......


என் உயிர் காதலி, 
என் உயிர் நீயாடி, 
உன்னிடம்   காதலே, 
உன் இடம்  இதயம்தானடி, 

என்னிடம்  மறைக்காதே, 
என் இடம் உன் இதழ்தானடி, 

 தேவதையே உன் ஓரபார்வையால், 
தேவ வதையை உணர்க்கிறேனடி, 

சிதையில் இட்டாலும் - என் 
சீதையின் இராமனாக இருப்பேனடி, 

மெய் தான் கண்மணி, 
மெய்க்காக இல்லையடி, 

என் உயிர் காதலி, என் தேவதை 
நீதானடி,..................

4 February 2018

என்மீது கோபமா ..........


என்மீது கோபமா

வான்நிலா தேய்ந்து 
வளர்வதை போல், 
என்நினைவுகள் மலர்கின்றதடா, 
வளர்ந்தபின் தேயும் 
என்பதை அறிவேன், 
வளர்வதும் தேய்வதும் 
காதலின் இயல்புதானடா, 
என்மீது கோபம் 
குறையவில்லையா, 
ஊடல் கொள்வது கூடலுக்கு தானடா, 
உன்வருகைகாக 
பூத்திருக்கும் ஆம்பல் நான், 
விரைவில் வந்து உன் மதிமுகம் காட்டடா, 
             என் காதலா........................

3 February 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன் .....


பல கனவுகளுடன், 
பள்ளி முடித்து, 
பொறியியல் படித்தேன், 
வாய்ப்புகளை தேடி சென்றேன், 
வாயிற்காவலரிடம் பேசிவிட்டுதான் வந்தேன், 
பதிரெண்டு மணிநேர வேலை, 
படிக்காதவரின் மேற்பார்வையில், 
பாதிகூட இல்லை வாயிற்காவலர் சம்பளத்தில், 
படுத்தவுடன் உறங்குகிறேன், 
பாதியில் எழுந்தால் அழுகிறேன், 
வயிறு நிறைய சாப்பிட்டதில்லை, 
வாய் ருசிக்கு தேடியதில்லை

கதிரவன் வருமுன் செல்கிறேன், 
கனவில் மட்டுமே கரையை காண்கிறேன், 

ஒருபோதும் தளரவில்லை, 
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையில், 
என் பயணம் ...........

2 February 2018

மெத்தை ......


தாங்கமுடியாத துன்பம் வந்தால் , 
துயர் நீக்கும் மெத்தையை தேடுகின்றேன், 
ஆனால் அப்போதே - அந்த 
துன்பங்கள் பறந்துவிடுகின்றன, 
தொலைத்த மெத்தையின், 
நிலைத்த நினைவுகளால்......

1 February 2018

பெருமை .........



அன்னையே! 
அம்போருகம் போல், 
அல்லல் என்னை தீண்டமால், 
அமுது அள்ளி கொடுத்து, அரைவயிறு நீ நனைத்து, 
அல்லும் பகலும் வளர்த்தவளே!, 
அருகில் இருக்கும் வரை, 
அருமை தெரியவில்லை, 
அறிந்தபின் அடக்கமுடியவில்லை அழுகையை , 
ஏக்கங்கள் எரிமலையாக சிதறுகின்றன , 
சுடரொளியாக உன்னை காண்கின்ற போது ,, 

உன் 
பாதியின் அரவணைப்பில், 
பக்குவம் அடைந்தேன், 
படைப்பின் சுழற்சியை உணர்ந்தேன் , 
இல்லாமையை மறந்தேன், 

இருப்பினும் சில நேரங்களில், 
சிரிக்கின்றேன் வலிகளை மறைத்து, 
சிரிக்கவைக்கின்றேன் வலியின் வலிமையறிந்து, 
எரிமலையை 
எள்ளளவு விதையாக்கி, 
பரந்து விரிந்த மரம் வளர்த்து, 
பறந்து திரியும் பறவைகளுக்கு வீடக்குவேன், 
என்னை சுமந்த உன் பெருமைக்கா மட்டுமில்லை, 
என்னையும் சேர்த்து சுமந்தவர்க்காவும்..........