அன்பே கடவுளடா
.
ஆத்திகம் என்பதும், நாத்திகம் என்பதும்,
அவரவர் பார்வையிலடா,
ஏகன் என்பதும், அனேகன் என்பதும் ,
கடவுளின் பிம்பமடா
பிணத்தை மிதித்து
கடவுளை காண்பதா!!!
என்ன புண்ணிய கணக்குடா,
கீழே உள்ளவரை
மேலே உயர்த்தினால்
நீயும் கடவுளடா,
அண்ணைய துறந்து,
திண்ணையை வணங்குவது
என்ன அர்த்தமடா,
அரசமரத்தை வெட்டி ,
ஆயிரம் முறை சுற்றுவது
என்ன நம்பிக்கையில்டா,
குழந்தை பேச்சில் கரையாதவன்
கடவுளை காண ஒடுவா,
.
குழந்தை முகத்தில் கடவுளைகாண்பவன்
கடமையாற்றும் வழி செல்வான்.
அன்பே கடவுளடா ...........
............................ ... ......... . ......... செநா

No comments:
Post a Comment