31 January 2018

இலக்கு ......




இன்று விதைத்தால் 
இன்றே முளைத்திடலாம் 
ஒருபோதும் கனி தந்திடாது, 
விதிப்பவன் பிறந்தாலும் 
விதிவிலக்கு இல்லடா,, 


கானல்நீரை பருகுவதுதன் 

குறுக்குவழி ஒட்டம், 
வாழ்வில் விவேகமிருந்தால் 
வெற்றி உன்கையிலடா... 


இருப்பதை வைத்து 

இலக்கை துரத்து 
இறுதியில் புரியும் 
இறைவன் கணக்கு 


நிலைமை மாறினாலும் -தன் 

நிலை மாறமால் நீயிருந்தால் 
நீயும் சரித்திர நாயகன்டா...

30 January 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன் ..........


வாழ்வினில் துன்பம் யாதனெயறிய 
சின்னஞ்சிறு பறவையாய் 
சேட்டை செய்து வாழ்ந்தேன்  ,, 


மேற்படிப்பில் நுழைந்தேன், 

வாழ்வை ரசித்தேன், 
புத்தகயறிவை புத்தில் வைத்தேன், 
ஆனால் ஏனோ உலகயறிவை கற்கமறந்தேன்,, 


கூட்டைவிட்டு குருவிகளாய் 

சேர்ந்து சென்றோம், 
உணர்வை உணர்ச்சியை அடக்கி 
உறங்கும் நேரம் குறைத்து, 
ஒயமால் உழைத்தேன், 
ஒருவருடம் கடந்தேன்,, 


மறுநாளே வெளியில் செல்ல 

நிர்வாகம் என்னை தள்ள 
தடுமாறி போனேன்,, 


நூலறுந்த பட்டமாகி 

காற்றின் திசையில் பறந்தேன் 
முள்ளில் சிக்கி சிதைந்தேன்,, 



கண்களில் கண்ணீர் தெரியமால் 

கண்ணுக்குள் கனவை உடைத்தேன், 
அந்திக்குள் திரும்பதா பறவை போல 
நான் மாட்டிகொண்டேன் ,, 


ஆனால்..... 

இறக்கையில் வலுவிருக்கு, 
இன்னும் நம்பிக்கையிருக்கு, 
விடியும்வரை போரடுவேன், 
விழமால் நிலைத்திருப்பேன்..

29 January 2018

மாயனம் ..........



உலகத்தில் எல்லாம் மாயம் மாயம், 
அதை உணரவிட்டால் உனக்குகாயம், 


நீரை போன்றது வாழ்க்கை, 

அதில் சுழற்சி என்பது இயற்கை, 


கொள்கையில் வேண்டும் நாட்டம் நாட்டம், 

அதுயில்லாவிட்டால் உனக்கு நட்டம், 


உனக்கென்று கொள்கையை வகுத்துக்கொள், 

அதில் பிழைகளிருந்தால் திருத்திக்கொள், 


வாழ்க்கை என்பது தற்காலிகம், 

இதில் யாருக்குமில்லை அதிகலாபம் , 


இங்கு போலிகணக்குகள் ஏராளம், 

எல்லாம் முடியுமிடம் அந்த மாயனம்........

28 January 2018

என்னிதயம்




காதல் மழையில் 
கண்ணீர் துளிகள் கலந்தது ஏனோ! 
காதல் உலகில் 
கல்லறையில் புதைந்தது ஏனோ!! 




வாழ்வின் பாரம் அறியதன் 

பூவின் மென்மை உணரவைத்தயா!! 
விழிதாண்டமால் அழும் 
வித்தையை செய்யதன் 
விழியால் பேசும் மொழியை கற்கவைத்தயா… 




என்பெயர் உன் பெயராகதன் 

உன்பின்னே வந்தேனடி,, 
உன்இதயம் என் இடமாகதன் 
என்னுள்ளே கனவை வளர்த்தேனடி,, 




வானவில் விண்ணைவிட்டு மறைந்தாலும் 

கண்கள் சிலகணம் விண்ணையே நோக்கும், 
அதுபோல நீ என்னை விட்டு பிரிந்தாலும் 
என்னிதயம் உனக்காக மட்டுமே காத்திருக்கும்........

27 January 2018

மனமே மனமே ................


மனமே மனமே, 
எனது மனமே, 
எங்கே சென்றயோ, 
எங்குதான் செல்கின்றாயோ!!! 


சில நொடிகளில் 

உலகைக் காண்பிக்கிறாய், 
சில நேரங்களில் 
வாழ்வை இருளாக்குகிறாய், 


நிரந்தர நிலையில்லா நாடோடி, 

பல முகமுடி அணிந்த கோமாளி, 
உணர்ச்சி உணர்வை வைத்து விளையாடும் வித்தகன் நீதானே …. 
அடம்பிடித்து அடைந்ததை அடுத்தகணமே எரிந்திடும் குழந்தையும் நீதானே, 


உன்னை ஓர்நிலைப்படுத்தாமல் 

நான் நிலைத்தடுமாறுகிறேன், 
உன்இடமும் குணமும் அறியாமல். 
உன்னைத் தேடி அலைகிறேன் , 


காலங்கள் செல்ல செல்ல 

எண்ணமும் நினைவும் நீதான் 
என்பதை உணர்ந்துகொண்டேன் - 
இனி 
நல்விணைகள் விதைத்திடுவேன்......

25 January 2018

ஊமை காதல் Oomai Kathal



நெடுந்தூரம் போனால் என்ன?
நொடிப்பொழுதும் உன்நினைவுகள்
என்னுள்ளே என்றும் மறையாதடி...

உண்மை காதலாயிருந்தும் ஏன் அது
ஊமை காதலாய் ஆனதடி...
தானாக தோன்றுவது தான் காதல் வேண்டி பெறுவதில்லை,
வேண்டாமடி உந்தன் அனுதாப காதல் பெண்ணே,,

மார்கழி மாதம் கோலமிடும் பெண்ணை காண
கடவுள் வருவதாக கதைகள் சொல்கிறது ...
தினமும் காணவரும் என்னை
என்னவென்று சொல்வாய் பெண்ணே....

அந்திக்குள் திரும்பும் பறவைகளுக்கு
கடிகாரம் இல்லை,
அதைப்போல தானே உன்மீது
காதல் கொள்ளக்காரணம் இல்லையடி.....

உன்னுள் என்னுள் .....

உன்னுள் என்னுள்


உன்னுள் என்னுள் நிலைப்பது என்ன?
உயிர் இயக்கத்தின் பொருள்தான் என்ன?

வெளிச்சம் வரும்வரை
இருள் விலகுவதில்லை,
விடைபெற்று செல்லும்வரை
ஆசைகள் விடுவதில்லை,

குருடர்கள் தொட்ட யானை கதை போல
கொள்கையில் முரண்பாடுகள் வந்தது மானிடா,
வகுத்தவன் கணக்கில் பிழைகள்டா,
அதனால் வந்தது வினைகள்டா,

வீண்விவாதங்கள் ஏன் தோழா ??
இயற்கைதான் இறைவன் உணர்தோழா ...

24 January 2018

முதல் காதல் .........


உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?

காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,

23 January 2018

வண்ணத்துப்பூச்சி



வண்ணச்சிறகை விரித்து,
வாசல்வழி சென்று,
விருந்தோம்பல் ஏற்கும்
வண்ணத்துப்பூச்சியே!!

அனைவர் அழைப்புக்கும் செல்கிறாய்,
அமுதுதேன் உண்கிறாய்,
அன்பாக அரவணைக்கிறாய்,,
-
சூதுவாது தெரியாத பட்டாம்பூச்சியே!!
நடக்கும் நாடகம் புரியவில்லை உனக்கு,
நடப்பதை அறிந்தும் சொல்லதெரியவில்லை எனக்கு,

பூவும் உறவும் ஒன்று தான்,
காரியம் ஆகும்வரை உபசரிப்பு,
காரியம் வேண்டுமென்றால் தான் மறுஅழைப்பு 

22 January 2018

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

கல்லும் சிற்பமாகும், 
உளியால்... 
கலங்காதே மனமே!!! 

வெறும்காகிதமும் பூவாகும், 
கைவினையால்... 
கலங்காதே மனமே!!! 

கலங்கியநீரும் தெளிவாகும், 
காத்திருந்தால்... 
கலங்காதே மனமே!!! 

உன் கருத்துக்கு, 
உலகமே செவிச்சாய்க்கும், 
ஒருநாள்.... 
கலங்காதே மனமே!!! 

வெற்றியும் உனதே, 
உன் தொடர் முயற்சியால்... 
கலங்காதே மனமே!!! 

ஆயிரம் தோல்விகள் 
வந்தாலும் , 
கலங்காதே மனமே!! 
ஏனெனில் , 
நீ தோல்வி எனும் உளியால் 
செதுக்கப்படுகிறாய்!!!! 
கலங்காதே மனமே!!! 

சிரித்தும்;சிந்தித்தும்; 
வாழ்வாயாக மனமே!!!

என் அருமை தங்கச்சி

என் அருமை தங்கச்சி

உன் மறு தாயும், 
நானடி! 
என் முதல் சேயும், 
நீயடி! 
என் அருமை தங்கச்சி!!!

இனியவளே ,.......

இனியவளே

கார்மேகம் கலைந்திட, 
கருங்குயில் கூவிட, 
அழகிய சோலையில், 
அந்தி வேளையில் , 
மரங்கள் சுமந்த முத்துகளை , 
நீ உதிர்க்கும் போது, 
உன்னை காணவந்தேன், 
உன்கண்ணை பார்த்துநின்றேன், 
உன் கண்ணில் என்னை காணவில்லை 
இதயத்தை காண்கின்றேன் ,, 
இனியவளே!! என்னிடம் உள்ள 
உன் இதயத்தை காண்கின்றயா?? 
இல்லை 
உன் இடத்தை காண்கின்றயா??

21 January 2018

கனவு தான் காண்கிறேனா ........


உயிரை விட உயர்வாய் நினைத்தேன்,, 
உடையை போல் கழற்றி ஏறிந்துவிட்டாய்,, 
கனவு தான் காண்கிறேனா,, 
கண்ணீர் வரவில்லையே,, 
கனவிலும் நினைக்கவில்லையே,, 
கண்ணாடியாய் இதயம் உடைந்ததே....... 
இரவுக்காக பழகவில்லை, 
இறக்கும் வரை பயணிக்க நினைத்தேன், 
இதயம் பிளந்து வெளியே வந்து, 
உயிருடன் புதைத்துவிட்டாய் பெண்ணே!!!...

20 January 2018

வாழ்வதற்காக பிறந்தேன்.................

வாய்ப்புகளை தேடுகிறேன்,,
வலியோடு திரும்புகிறேன்,,
பிழைக்கதான் ஒடுகிறேன்,,
பிறந்ததால் வாழ்கிறேன்,,

அரிய வகை இரத்தம்,,
அவமதித்தது சொந்தம்,,
வொறுத்தது வாழ்க்கை,,
விலகியது நம்பிக்கை,,

இனியில்லை வழி,,
இதுதான் விதி,,

தாலாட்டிய தாய்,
தோளில் சுமந்த தந்தை,
கரம் போன்ற நட்பு,
கரம் பிடிக்க வேண்டிய காதல்,

அனைவரையும் விட்டு சென்றேன்,
அண்டவனை காண சென்றேன்,
ஆனால் கடைசி நேரத்தில்,

அடித்தது கைப்பேசி,
அவசர உதவி என்ற செய்தி,

கடைசியாக ஒர் நற்செயல்,
காப்பற்றினேன் குழந்தையை,
காலில் விழந்தால் அன்னை,
நான் மனிதன் என்றேன், --இல்லை
அவள் கடவுள் என்றாள்,
கண் கலங்கினேன்,

திரும்பிவிட்டேன்,
திருத்திவிட்டேன்
வாழ்வதற்காக பிறந்தேன்........................

19 January 2018

என்னுயிர் தோழி.......

இரு கண்ணில் நீர் வந்தால்,
மறுகணமே மறைய செய்வாய்;
இருள் சூழும் நிலை வந்தால்,
அக்கணமே ஒளிர செய்வாய்;

தோற்றம் காணமால் பழகும்,
அன்னையும் நீயானய்;
தடைகள் தாண்ட தூண்டும் தந்தையும் நீயானய்;

பிழை என்றால் காதை திருவும்,
அன்பு தொல்லையும் நீயே;
கோபம் கொண்டால் கண்ணால் பேசும் அறிவு பேதையும் நீயே;

அடியே!! வெகுளி பெண்ணே!!
கனவிலும் கள்ளம் தோன்றவில்லையடி,
எந்நிலையிலும் எண்ணம் மாறவில்லையடி,............

17 January 2018

ஊக்கம்.....

ஆயிரம் முறை தினம் பிறக்கும்;
இன்று மட்டும் உண்ண கேட்கும்;

கொடுத்துவிட்டால் காட்டில் இடம் தேடம்;
கடமைக்கு கொடுத்துவிட்டால்
உன்னை மன்னனாக்கிவிடம்;

தடைகள் வென்று
சரித்திரம் படைத்தவர்கள் பலர்;
தடுக்கி விழுந்து எழுந்தவர்கள் தான் அதில் பலர்;

உடல் முழுவதும்
ஊனம் இருந்தாலும்;
ஊக்கம் மனதில்
நிறைத்து வை;

ஊன் உயிர் கவலைக்கு இருந்து,
உன்னை எதிர்க்க நினைத்தால் கூட,
உன் ஊக்கம் கண்டு உயிர்பிரிந்துவிடும்;

வீழ்வது இயல்பு,
வீழ்ந்தெழுவதே சிறப்பு.......

அன்னை..

உயிர்வலி கொண்டாலும்
உலகம் காண உயிர் தருவாள்;
உயர் என்றும் உன்னதம் என்றும் உயர்த்தி பார்ப்பாள்;
ஊண் மறந்து உறக்கம் மறந்து
ஊட்டி வளர்ப்பாள்,,,,,

அறம் சொல்லி தரம் உயர்த்துவாள்;
அன்பு கொண்டு நெறிப்படுத்துவாள்;
ஆசை அறுத்து ஆயுள் கூட்டுவாள்,,

தரம் உயர்த்தும் தாரம் தேடுவாள் ;
தூரம் விலகினாலும் வாழ்க என வரம் கொடுப்பாள்;
சிரம் போகும் வரையிலும் கரம் தருவாள்..........

15 January 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன்.........

கதிரவன் உதித்த நேரம் - சென்றேன்
கல்லூரி சாலை ஒரம்,

வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
வந்தது வசந்த கால நாட்கள்,,

சொந்தமில்லா பல உறவு,
சொந்தமாக வேண்டிய ஒர் உறவு,,

கானல்நீராய் ஆனது வாழ்க்கை;
கண்ணீராய் போனது நம்பிக்கை,,

போதும் இந்த துன்பம் என நினைத்தேன்;
பேருந்து நிலையம் செல்ல துடித்தேன்,,

திரும்பும் போது வயதான அன்னையின் சிறுகடை;
திரும்பிவிட்டேன் மீண்டும் சிறை நோக்கி நடை..............

14 January 2018

என் மகள்........

என் மகளுக்கு!!
வானத்து சந்திரனும் கண் வைத்து விடுவான் என்று
சின்னஞ்சிறு பொட்டு எடுத்து கன்னத்தில் வைத்தேன் திஷ்டிக்காக;
ஆனால்
அவனும் வானிலிருந்து வந்துவிட்டான் அடுத்த நொடியினிலே........

13 January 2018

அன்னையின் வேண்டுதல்.......

கூற்றுவனே!!
கூட்டிச் செல்ல நேரம் வரவில்லையா;
அன்பு மகனை போல் உனக்கும் நேரமில்லையா........

விரைவில் வந்தால்,
தவ புதல்வனை தோழிகள் காண்பார்,
தங்க மகனை சிறுவயதில் விட்டு சென்ற கணவனை நான் காண்பேன்,

வரும் போது வருங்காலத்தை வாழ்த்தி விட்டு வா,
மருமகளை மாங்கல்யம் நிலைத்திட வரம் தந்து விட்டு வா,
சாதுவான என் மகனை கூடா சகாக்களுடன் சேரா என்று சாபமிட்டு வா............

12 January 2018

நேசிப்பு

மறக்க 
முயற்சிக்கிறேன் 
நேசிப்பின் 
ஆழம் 
அரியது.....

நினைவுகள்

நித்தம் 
உயிர் வாழ்கிறேன்
நீங்கா 
உன் 
நினைவுகளுடன்....

மதிப்பு

உருவத்திற்கு
அளிக்கும் மதிப்பை
கொஞ்சம் உண்மை உறவுகளின்
உணர்வுகளுக்கும்
அளியுங்கள்.....

தனிமை

விரும்புகிறேன் 
தனிமையை 
என்றும் 
என்னோடு 
உன்னை 
சேர்ப்பதால் 
நினைவுகளாக...

தனிமை

நிஜங்களை 
தள்ளி வைத்து விட்டு
நினைவுகளுக்கு 
உயிர் கொடுக்க வல்லது
தனிமை......

தனிமை

வாழ்கையை
உணர்ந்து கொண்டேன் 
இப்படிக்கு 
தனிமை

பிரிவு

உருகி உருகி கதலித்தாய் 
உதடு வலிக்காமல் 
சொல்லி விட்டேன் 
உன்னை வேண்டாம் என்று 
இன்று உள்ளம் வலிக்குதடா 
உண்மையான காதலுடன் 
உன் கண்களை 
பார்க்கையில்.....

புரிதல்

சொல்லாமல் 
புரிந்து 
கொள்ளவும்
என்னை பற்றிய புரிதல் 
இல்லை உன்னிடம்...
ஆனால் 
சொல்லியும் கூட 
நீ என்னை புரிந்து 
கொள்ளவில்லையே...

நினைவுகள்

நினைவுகள் 
சுகமானவை தான்
அது உன் 
நெஞ்சை 
கிழிக்காதவரை....

காத்திருப்பு

மெளன்னமாக 
காத்திருக்கின்றேன் 
உன் மௌனம் களையும்
 நாளை எதிர்பார்த்து.....

காதல் வலி

உண்மையாக மட்டும்
 யாரையும் 
நேசித்து விடாதீர்கள் 
அவர்கள் பேசாத 
நிமிடங்கள் போதும் 
உங்களை 
கொள்வதற்கு....

Hi

தேவதை.....

உன்னை பார்த்த நொடியினில்
உலகத்தை மறந்தேன்,
கண்ணருகே நீயில்லை என்றாலும்,
கண்கள் உன்னை தான் தேடுதே,,

யாரோ என்றுதன் பார்த்தேன்
கண்டவுடன் கவர்ந்துவிட்டாள்,
கண்ணின் வழியே கலந்துவிட்டாள்,
மண்ணில் தான் நிற்கிறேனா?
மங்கைகள் யாவரும் தங்கையானர்களே,,

குயிலோசை கேட்கும் போது – உன்
குரலோசை தோனுதே,
விரலசைவுகளை காண்பது போல்
விடிற்கால கனவு வருதே,,

தேவதையே உன்னை பார்த்தபின்
தென்படும் யாவரும் நீயானய்,
இராமனாக சீதையை சுற்றிய
இராவணன் ஆக்கினாய்.....

VaasuSena: தேவதை....

VaasuSena: தேவதை....: உன்னை பார்த்த நொடியினில் உலகத்தை மறந்தேன், கண்ணருகே நீயில்லை என்றாலும் கண்கள் உன்னை தான் தேடுதே,, யாரோ என்றுதன் பார்த்தேன் கண்டவுடன...

11 January 2018

எனக்குள் ஒரு மாற்றம்


எனக்குள்
ஒருஎனக்குள்
ஒரு
வசந்தம்
அவன்
வரவால்…!

எனக்குள்
ஒரு
மாற்றம்
அவன்
நினைவால்…!

எனக்குள்
ஒரு
இன்பம்
அவன்
உறவால்…!

எனக்குள்
ஒரு
வலி
அவன்
பிரிவால்……………………….!




கருவாச்சி


கருவாச்சி 1
வெயிற்கால தூறல் போல 
வந்து வந்து போகுற,
வெள்ளரி கொத்தும் குருவி போல 
அங்கும் இங்கும் பார்க்குற,,, 

சின்ன சின்ன ஆசைய 
பொக்கிஷாம காக்குறேன்,
உன்ன பார்த்த நொடியில 
அத்தனையும் மறக்குறேன்,, 

விதவிதமா சமைக்கிறேன்,
விடாபிடியா நீ மறுக்குற,
விடுவேனு நினைச்சியா,, 

நீ வரும் வரை தானே 
கோழி கூவுது,
பத்து வீடு தாண்டியுள்ள 
அக்கா வந்து கேட்குது,

தொட்டால் சினிங்கி போல 
பக்கம் வந்தா சினுங்குற, 
விலகி தூரம் போன 
கன்றுக்குட்டி போல தேடுற,, 

வீதில போகும் போது 
தரைய பார்த்து பெண்ணுங்க போரங்க 
ஏனு கேட்டியா,
போன முறை உன்ன பார்த்த பெண்ண 
இப்ப நீ பார்த்தியா,, 

வயசு பசங்க எல்லாம் 
உன்ன பார்த்து முறைக்கிறங்கலா,
சின்ன பசங்க எல்லாம் 
உன்ன சுத்தி சுத்தி வரங்கலா,, 

தென்ன கீற்று கட்டி ரொம்ப நாளச்சு 
தாலி கட்ட நேரம் வந்திருச்சு 
காலில் மெட்டி போடனும் 
சேலையில் தொட்டி கட்டனும்,, 

வா மாமா

10 January 2018

காதல் உளி கொண்டு வா அன்பே……

என் அன்பே!! 
விழியால் என்னை 
வெல் அன்பே,, 

சொல் அன்பே!! 
இதயத்தில் உள்ளதை 
சொல் அன்பே,, 

சேர்த்து சொன்னால் 
உடன் வருவேன் 
இணையாக,, 

பிரித்து பார்த்தால் 
முன் செல்வேன் 
அரணாக,, 

சொல் அன்பே!!!! 
நதியாக அலைகிறேன்
கடலாக அணைப்பாய,, 

பாலைவனாக எரிகிறேன்
முகிலாக காப்பாய,, 

கல்லாக இருக்கிறேன்; 
காதல் உளி 
கொண்டு வா அன்பே……………………

9 January 2018

உன்தன் மீது காதல்,......

தேகம் கண்டு வரவில்லை
உன்தன் மீது காதல்,  
நேசம் மட்டுமே 
என்தன் ஒற்றை ஆவல்,, 

கற்பணையும் சிலகணம் தோன்றுதடி; 
அத்தனையும் மறுகணம் விழிக்கொண்டு சாய்க்கின்றாயடி,,, 

உந்தன் விழியின் ஒரம் கண்ணீர் துளி காணும் வகையில்; 
எந்தன் பாதை என்றும் மாறாதடி,,, 

தலை மடியில் சாயும் நேரம்; 
தோள்கள் உன்னை சுமக்கும் போதும்; 
இருவரும் குழந்தை ஆனோமடி,,, 

உன்விரல் பிடித்திடும் வரம் கிடைக்க, 
எத்தவம் செய்தேனடி..........

என்னுள் நுழைந்தவளே.......

உனக்காக பிறந்தேனா!, 
எனக்குள்ளே நீ நுழைந்தாயே, 
ஏக்கங்கள் கண் காண்பது புரியலயா,, 
அன்பே!!..... 

தென்றல் உன்னை தீண்டும் நேரம், 
அந்தி மடி சாயும் காலம், 
உன்னை காண வருவேன், 
உன் கருவிழிக்குள் என்னை 
சிறை வைப்பாயா அன்பே!!!..... 

உன் அருகே நான் வந்து நின்று, 
உன் கையில் பூ ஒன்று தந்து, 
உன் கண்ணில் என்னை நானும் கண்டு, 
அன்பை சொல்வேன் ஏற்பாயா,, 
அன்பே!!!....... 

கருவாச்சி.....

கருவிழி போல் காவிய வண்ணம் 
கொண்ட தமிழ் மாண்பு பெண்ணே! 
கடைவிழி கொண்டு குருதியில்லாமல் 
இதய சுகவலி தரும் அழகு மானே! 
இமைபொழுதும் உனை மறவாமல் 
நான் இருக்கிறேன்-ஆனால் நீயோ., 
இமை கொண்டு மைவிழியில் என்னை 
மட்டும் சிறைவைப்பது ஏனோ!!!

ஓருபோதும் மறவாதே.........



ஒருபோதும் மறவாதே,

இரவிலும் நினைக்காதே,

உன்னோடு நான் வாழதானே

தினமும் கண் விழிகின்றேன்.




கனவிலும் உறவாடுவேன்,

கவிஞன் நான் இல்லையே!

கவிமழை பொழிவது ஏனோ,

கார்மேகம் நீ ஆனாயோ!




மெல்ல ஒர் சத்தம் கேட்டாலும்,

கண் இமையா நொடியினிலே,

என்மனம் உன்னை தேடுதே,




அடிபோடி!!!

நான் உன்னை நோக்க,

இமை இரண்டும் சதி செய்யுதே,

இருந்தாலும் சுகம் கூடுதே...........

vetkam


மதி மறைத்து மயக்கம் தடுத்தாய்-ஏனோ 
மதி மறந்து போனது 
மதி கூட மயங்குவன் - உன் 
மதி (முக) புன்னகையில் என்பதை.......