25 November 2020

தனிமையில்

 




உந்தன் வார்த்தையில்
உதிர்ந்த உடலாய்,

நானும் போகிறேன்....

உதிர்ந்த உடலும் ஏனோ???
உந்தன் நினைவையே
உயிராய் எண்ணி துடிக்குதே ....

உந்தன் சில நிமிட வரிகள்,
எந்தன் பல நிமிடங்களை
நீளும் மௌனத்தில் புதைக்கிறதே.

எந்தன்
கண்ணீரும் கனவுகளும் அன்பின் பரிசாய்,
இன்றுவரை தொடர்கிறதே... 

2 September 2020

யாதும்


 


நினைவுக்குள் நீந்தி
நிமிடத்தில் மாறிடும் 
கற்பனையில் உன்னையே நேசிக்கிறேன்.

உன்னிடத்தில் சொல்ல
உள்ளுக்குள் துடித்திடும்
இதயத்தில் வார்த்தையை சேர்க்கிறேன்.

ஏனோ என்னுள்ளே பயம்                                                                                                என்னை கொல்லுதே

மறுப்பாயா? மன்னிப்பாயா?என்று எண்ணியே 
இரவில் கனவுகளை தொலைக்கிறேன்.,


 

9 February 2020

காதல்






விழியோ உந்தன் வருகை 
எதிர்பார்த்து நின்றாலும்,
மனமோ எந்தன் உயிரை 
உடலுடன்சேர்க்க விரைகிறது 
அன்பே!!

7 February 2020

தாயுமானவள்

எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாய் ,
என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாய் ,
முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாய் ,
சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாய்  ,

தாயே எனக்காகவே 
மீண்டும் பூமிக்கு  வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
என்ன புண்ணியம்  செய்தேனோ,
இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,

தேவதைக்கு தேவதையாக பிறந்தளே ,
என் தாயுமானவளே.............

21 February 2019

சொந்தமும் பந்தமும்




இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் உலகம்,
சொந்தமும் பந்தமும் இருப்பதுதான் வாழ்க்கை

தமிழால் கதைபேசி மகிழவும்,
தலைமுறைகள் தலை தூக்கி வாழவும்,
என்றும் தேவை சொந்தமும் பந்தமும் ,

கோடி தெய்வங்கள் இருந்தாலும்
காக்கும் தெய்வத்திற்கு இணையில்லை,
ஒருபானை பொங்கலுக்கு அடைந்திடும்
ஆனந்தத்துக்கு அளவேயில்லை

உறவுக்குள்ளே எத்தனையோ முரண்பாடு இருந்தாலும் ,
அவையில்லா வாழ்க்கை மூலாம்பூசிய பொருள்களாகும்.


20 February 2019

வரம்

வாயக்காடு தரிசச்சு,
சுடுகாடும் குடியிருப்பாச்சு,

மும்மாரி பொழிந்து
முப்போகம் விளைந்த,
முன்னோர் காலமெல்லாம் மலையேறி போச்சு,
இக்கால வாழ்க்கை வறண்டுச்சி,
எதிர்கால பாதைகளும் மாறிடுச்சி,

வாழ்வளித்த எங்களுக்கு
வாய்க்கரிசியவது கிடைக்குமா?
மழை வேண்டி காணிக்க செலுத்தவது
வர்ணனே வரம் தருவாயா,