31 March 2018

மனசாட்சி

கட்டம் பார்த்து வாழுர,
திட்டம் போட்டு ஒடுற,
பட்டம் பெற்று பயனியில
கூட்டதுல ஒருதன நிற்குர,

கடவுள் பெயரில் வியாபாரம்,
போனதுக்கு குறைந்ததா மனபாரம்,
பிச்சை போடகூடா காசில்லா
இதுதான் இப்ப உன்நிலவரம்,


வந்தவன் எதை சொன்னாலும்,
சொன்னதை எல்லாம் செய்தலும்,
துன்பம் மட்டும் குறையில
இன்னும் உண்மை உனக்கு புரியல

ஆறறிவு மானிடா,
பகுத்தறிவு இருக்குதா,


இரண்டும் கலந்த வாழ்கையில்
ஒன்றை மட்டும் விரும்பாதே,
சமநிலை கொண்டு வாழ்ந்திடு,
பாதையின் நோக்கம் புரிந்திடு,
வாழ்வில் பற்றற்று இருந்திடு.....

28 March 2018

உலகத்தை வென்றிடு



தோல்விகள் கண்டு மயக்கம் ஏன் தோழா ?

தடைகளை தகர்க்க தயக்கம் ஏன் தோழா ?

உன்மீது நம்பிக்கை கொள் தோழா ,

உனக்கென்று பாதையை உருவாக்கு தோழா,


மூடர்கள் நிறைந்த இடத்தில்

முரண்பாடுகள் கொள்ளதே,

முடிந்தவரை விலகி சென்று விடு,

முன்னேற்றம் ஒன்றே முதன்மையாக்கிடு,


துயரால் காயம் கொண்டால்

ஆழ்ந்த துயிலை நாடதே,

துடிப்புடன் மீண்டும் எழுந்திடு,

மதிகொன்டு விதியை வென்றிடு,


கனவுகள் யாவரும் காணலாம்

கரைகளை அடைந்தவர் சிலரே,

உழைப்பால் உயர்ந்திடு,

உலகத்தை வென்றிடு.......

27 March 2018

காதல் பயணம்



என்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும்

என்னால் உன்னை மறக்கமுடியவில்லை,


என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை

என்று தெரியமால் தினம் துடிக்கின்றேன்,

உன்னை ஏன் எனக்கு பிடித்தது

என்று புரியாமல் தினம் தவிக்கின்றேன்,


எதுவும் புரியாமல் என்னுள் ஏராளமான கேள்விகள் எழுந்த போதும்

உன்னிதய ஒரத்திலாவது இடம் பிடிக்க முயல்கிறேன்,

உயிருள்ளவரை என்காதலை புரியவைக்க முயற்சிக்கிறேன்,


எதுவரை தொடருமோ இந்த காதல் பயணம்,

அதுவரை தொடரும் என்வாழ்வின் பயணம் ……

25 March 2018

உயிரே வருவாயா



பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும்,

உயிரில் கலந்த காதலை

பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி,



உன்னை பார்க்ககூடாது என்று

நான் ஒதுங்கி சென்றாலும் ,

எல்லாம் உந்தன் விம்பமாக மாறி

என்னை தொல்லை செய்யுதடி,




உன்னை நினைக்ககூடாது என்று

என்னை நானே வற்புறுத்தினாலும்,

அந்த வலியிலும் உந்தன் நினைவு

தோன்றி என்னை கொல்லுதடி,



இதயத்தில் காயம் இருந்தாலும்,

அதன் இடத்தில் சிறிதும் மாற்றமில்லை,

அதே காதலுடன் உன்வருகைக்காக காத்திருக்கிறேன்,

உயிரே வருவாயா ....................

23 March 2018

தனிமையோடு பேசுங்கள்





உணர்ந்தும் உணராத ,புரிந்தும் புரியதா,

நம் நினைவுகளின் தொகுப்பில் உள்ள

பல வினாக்களுக்கு விடை தேடி நமக்குள்

நாமே செல்லும் பயணம்தான் தனிமை,




பயணம் பிறரின் தூண்டுதலின்றி வந்தால்

கொஞ்சம் இனிமையும் கசப்பும் கலந்திருக்கும்,

எவ்வித பிறர்தூண்டுதலின்றி சுயமாக வந்தால்

வாழ்வில் இனிமையே மட்டுமே தந்திருக்கும்,




தனிமை என்பது அன்மாவின் உரையாடல்,

அது கடவுளின் மொழி கற்றுக்கொள்ளுங்கள்

வாழ்வில் நலம் பெற தனிமையோடு பேசுங்கள் ……

22 March 2018

இடமாற்றம் செய்யப்பட்ட தோழிக்கு


எங்கிருந்தோ வந்து என்னை
எனக்கே பிடிக்கவைத்தாய்,
இதயத்தில் அன்பை வளர்த்து
இணைப்பிரியா உயிர் தோழியானய்,

உயிருக்குள் பிரிவை தரமுடியமால்
இறைவன் சதி செய்தனோ,
இடத்தைமாற்றி இன்பம் கொள்கிறனோ,

நீயில்லா அலுவலகம்
வாசமில்லா பூக்களாய் மலர்கின்றது,
ஒளியில்லா நிலவாய் தோன்றுகிறது,

தொலைதூரம் நீ சென்றாலும்,
தொடுதிரையில் குரல் கேட்டாலும்,
இறைவன் விழிதிரையிலிருந்து பிரித்தாலும்,
நம்நட்பில் இடைவெளியே இல்லையாடி,

உன் அலுவலகப்பணியில்  நீ மென்மேலும்
வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழி
என்றும் உன்நட்புடன் நாங்கள் ……………….


21 March 2018

காற்றோடு காற்றாக




காதல் வானில் இணைப்பிரியா பறவையாய்

காற்றோடு நாம் பறந்தோம் ,

இன்று நான்மட்டும் தன்னந்தனியே

இதயமின்றி நிற்கின்றேன்,




நீ எடுத்து சென்ற

உன்னிதயத்தை திரும்பி தந்திடு,

இல்லையேனில்

என்னிதயத்தை எங்கோ விசி எறிந்திடு,



ஏ பெண்ணே!

உன்நினைவுகளை இதயமாக்கி

உன்வருகைக்கு காத்திருப்பேன் ,

வரவில்லையேனில்

உனக்காக இவ்வுடலை தியாகம் செய்து

காற்றோடு காற்றாக கலைந்திடுவேன் .

17 March 2018

உலகத்தை பாரடா

அன்பென்னும் மழையில்லா
அகிலத்தில் உயிர்கள் வாழ்வதில்லை,
பண்பென்னும் நதியில்லா
உலகத்தில் உயிர்கள் வளர்வதில்லை,

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்று சொல்வது ஏனோ,
கருணை கொண்ட உள்ளத்தில்
கடவுள் வாழ்வதால் தானே,

மத சண்டை சாதி சண்டை
மண்ணில் வருவது ஏனோ ,
அன்பும் அரவணைப்பும்தான்
வாழ்க்கை என்பதை மறந்ததால் தானே,


கல்லை கூட கடவுளாக பார்க்கும் மனித,
கண்களில் கருணை கொண்டு உலகத்தை பாரடா .,

16 March 2018

அழகான கோபக்காரி


இதயத்தின் அருகில் சாயும் மானே,
கோபம் கொண்டது ஏனோ,
இதமாய் முத்தமழையை பொழிந்து
கோபத்தீயை அணைக்கவா,
உன் பொய்கோபக்கடலில் முழ்கி
இதழ்முத்தை எடுத்திடவா,

கண்ணீர் வரவழைத்து  நடிக்கதே,
சுட்டுவீரல் காட்டி  மிரட்டதே,
விழியால் அம்பெய்து  கொல்லதே,
உன்முகத்தில் விளையாடும் புருவத்தை கண்டு
என் கண்கள் இமைத்திட மறுக்குதே,
உன் செயல்களையெல்லாம் கண்டு வியந்துபோகிறேன்,

போதும் என்று கோபத்துடன் இருக்கும்
உன்னை அணைத்திடும் போது
என்மார்பில் நீ அடித்திடும் அடிகள்
ஒவ்வொன்றும் எனக்கு இனிக்குதே,
இன்னும் கொஞ்சம் சுவைக்கவே
உன்னை சீண்ட தேனுதே.,




15 March 2018

ஒத்தையில போறவளே


களத்து மேட்டுல ஒத்தையில போறவளே,
மாமன்தானே கூப்புடுறேன் கொஞ்சம் நில்லுபுள்ள,
கண்டும் காணமால் போவது ஏனோ,

இடுப்பு சிறுத்தவளே இறுமாப்ப போறவளே,
சும்மாட்டை இறக்குபுள்ள மாமாவோட பேசுபுள்ள,

வண்டுகண்ணால அம்புவீசி வீறாப்ப போறவளே,
கொலுசு வாங்கிதாறேன்  கொஞ்ச வாடிபுள்ள,

எட்டுமுழ சேலைகட்டி ஏகத்தளமாக போறவளே
முந்தானையில வேர்வைத்துடைத்து முத்தமுன்னு தாடிபுள்ள,

மாமன்தானே கூப்புடுறேன்
கொஞ்சம் நில்லுபுள்ள..........................

14 March 2018

காதலே என் காதலே

காதலே என் காதலே,
என்னை என்ன என்னவோ செய்கின்றாய்,
விழிவழியாக வந்து என்னை  ஆள்கின்றாய்,

காகிதமாக நானிருந்தேன்
மையாக வந்து கவிதையாக்கினாய்,

காற்றாக நானிருந்தேன்
குழலாக வந்து இசையாக்கினாய்,

எந்த வலியுமின்றி இதயத்தை மாற்றினாய்,
எந்த சிறகுமின்றி வானில் பறக்கவைத்தாய்,

இனி
உயிர்வளியாக நீடிப்பாயா? இல்லை
உயிர்வலியாக மாறிவிடுவாயா?

13 March 2018

குழந்தை தொழிலாளி

மொட்டுகள் வாசமிழந்து வாடுவது ஏனோ?
இறைவன் இறக்கைககளை பிய்த்து எறிந்தனோ,
இல்லை மிருகங்கள்  மனிதனாக வேடம்  தரித்ததோ,

மலரும்முன் மண்ணில் விழ்ந்தாயே,
கனியும்முன்  பிஞ்சில்   வெம்பினாயே,
அழுவதற்கு  கூட நேரம் இல்லமால்,
அரைவயிரை  நிறைக்க  ஓடுகின்றாயே,
உன் நிலை கண்டு என் உள்ளம் உறைகின்றதே.

12 March 2018

காதல்கண் நோய்

உன் விழிப்பார்வையிலே  விழுந்தேனடி , 
உறக்கம் தொலைத்து  இரவெல்லாம் விழித்தேனடி ,

உன்னை பார்க்க  வேண்டுமென்று,
என்னிதயம் தினம் ஏங்கியதடி
அதனால்தான் உன்பின்னே வந்தேனடி,

ஒளிக்குறைந்தால் வரும் மலைக்கண் நோயை போல்
அன்பு குறைந்தால் காதல்கண் நோய் வந்திடுமே,
என்று எண்ணியே எல்லை மீறினேன் மன்னித்துவிடுடி,

இதுவரை நிலவொளி குளிரென்று  நினைத்தேனடி ,
கோவத்தால் விழிவொளி என்னை எரிக்கின்றதடி,

கோவத்தை கொஞ்சம் விட்டுவிடுடி,
கோவைப்பழ இதழே சிரித்துவிடுடி.,

11 March 2018

நம்காதலுடன்

தொலைவில் என்னை கண்டதும்
இமைகள் துடிப்பது ஏனோ?
நான் அருகில் வந்ததும்
உதடுகள் நடிப்பது ஏனோ?

இருளாயிருந்த என்வாழ்வில்
நிலவாய் வந்து ஒளிதந்தாய்,
காதல் வானில் தினம் பறந்தோம்
இணைபிரியா பறவையாய்,
பின்பு ஏன் பெண்னே
உன்னிதயத்திலிருந்து என்னை  துறந்தாய்,

நீயில்லா என்னிதயத்தில்
உயிர் சென்று அழுகிறதே ,
உன்னை நினைத்தே
என்வாழ்வும் கடந்து செல்கிறதே,
 
வானவில்லை போன்று
சிலகணம் பிரகசிக்க வரவில்லை,
வண்ணமில்லா நிழலை போல
உன்னுடன் தொடரவே விரும்புகிறேன்,

காலம் நம்மை பிரித்தாலும்
காதல் சேர்க்கும் என்று நம்பிக்கையில்
நம்காதலுடன் காத்திருக்கிறேன் .............

10 March 2018

இயற்கையின் அதிசயம்

பசுமை நிறைந்த வயல்கள் கண்டேன்,
அங்கே பாடும் குயில்கள் கண்டேன் ,
அந்த இசைக்காடும் மயில்கள் கண்டேன்,
அதற்கு தாளம்போடும் மரங்கள் கண்டேன்,
ஆடிடும் பாடிடும் சின்னங்சிறு பறவைகள்
என அனைத்தையும் கண்டேன் வியந்தேன்
கண்களில் கண்ணீருடன் காங்கிரீட் காட்டில்
இயற்கையின்  அதிசயம் என்ற காணொளியில்.

9 March 2018

கலியுக சீதை

என்னவளை பிரிந்து
கடல் தாண்டி போனேன்,
காலங்கள் பல கழித்து
அவள் வருகைக்கா காத்திருந்தேன் ,

அசோக வனத்திலிருந்து வந்த சீதை போல
அவள் என்னெதிரே  வந்தாள்,
இரு மழைத்துளி இடைவெளியில்,
இருவரும் எதிரெதிரே நிற்கையில்,

இவள் மண்ணில் வந்த தேவதையா,
இல்லை மனதை மயக்கும் பொய்மானா ,
என்ற சிறு எண்ணம் தோன்றி முடியும் முன்னே,

விழியால் வேள்வி செய்து
என்னையும் சேர்த்து  குதித்தாள் .

8 March 2018

தென்றலா

தென்றலா!
காதலன் கண்டு புன்னகை வீசும்
பெண்ணை போலவே நானும் மணக்கின்றேன்,
தெற்கில் இருந்து நீ வருவதால்
வெட்கம் கொண்டு கிழக்கே பார்க்கிறேன்,

என் காதலா!
எத்தனை உறவுகள் தேடி வந்தாலும்
அத்தனை பேரையும் வாசலிலே திருப்புகிறேன்,
உன்னை மட்டும் என்னை தழுவச்செய்கிறேன்,
அன்பை மட்டுமே நானும் எதிர்பார்க்கிறேன்...

7 March 2018

விழுதே கலங்கதே

என்னில் வந்த உறவே,
கண்ணீர் சிந்துவது ஏனோ,
கண்ணிலிருந்து நீ மறைந்தாலும்,
கண்களை நான் மூடினாலும்,
காற்றை போல உன்னையே சுற்றியிருப்பேன்,

எந்தன் நேசம் என்றும்
வானம் போல் உன்னையே தொடந்திருக்கும்,
எந்தன் வாசல் என்றும்
உந்தன் துணையுடன் வருகைக்கே திறந்திருக்கும்,

விழுதே கலங்கதே.

6 March 2018

வண்ணமில்லா கனவு

கண்கள் உன்னை கண்ட பின்னே,
காதல் இதயத்தில் பூத்தது பெண்ணே,
காலமெல்லாம் உன்னுடன் வாழ
கண்கள் கனவு கண்டது பெண்ணே,

கண்கள் வரையும் ஓவியத்திற்கு
வண்ணம் தீட்ட வந்தாய் என்று நினைத்தேன்
காவியங்கள் கொண்ட காதலை போன்று
நம்காதல் இருக்கும் என்று கனவுகண்டேன்,

ஏனோ உன்னிடம் சொல்ல பயந்தேன்,
எதுவும் புரியமால் தனிமையில் அழுதேன்.

சொல்வதற்குள்
நீ வெகுதூரம் சென்றாய்,
நான் உறக்கம் தொலைத்தேன்,

காலங்கள் கடந்தபின்
நீயோ என்னை பற்றிய எதுவுமில்லா  நினைவுகளுடன்,
நானோ உன்னை பற்றிய வண்ணமில்லா கனவுகளுடன் ….

5 March 2018

வழிமீது விழிவைத்து

கன்னி உன்னை கண்டபின்னே,
கண்ணிரண்டும் தூங்கவில்லை,
இதயத்தையும் காணவில்லை,
உன்னை தேடி வந்திருக்கும்,
தன்னிடத்தை தேடி வந்திருக்கும்,

பெண்ணே!
உன்திமிரை அதனிடம் காட்டதே,
அனுமதி தரவில்லையெனில்,
உன்னிதயமும் உனக்கெதிராக
போர்கொடி தூக்கிவிடும்,
உள்ளே செல்லவிடு,
உன்னிதயத்திற்கு விடைகொடு,

நம்கண்ணிரெண்டும்
கனவு உலகத்திற்கு போகவேண்டும்,
நம்காதல் காவியமெழுத
கம்பன் பேனாவை எடுக்கவேண்டும்,

நீ வரும்
வழிமீது விழிவைத்து காத்திருக்கேன்,
வழக்கம் போல் புன்னகை வேண்டாமடி,
உன்னியதயம் மட்டும் தந்தால் போதுமடி ........

4 March 2018

நிலவொளி

என் வாழ்வில் விடியலாய் வந்தாய்,
எந்தன் பயணத்தில் உயிராய் கலந்தாய்,
ஏன் பெண்ணே மேற்கில் மறைந்தாய்,
நீயில்லா வாழ்வு உயிரில்லா உடலானதே,


நீந்தி கடக்க கடல்முன் துணிந்தேன்,
நிலவொளியாய் வந்து தடுத்தாய்,
உன் இதயத்தை பார் என்றாய்,

உயிரில் உயிர் கலந்து ஒர் உயிராய்
இருப்பதை அவர்கள் உணரவில்லை,
நீயுமாய் என்றாய்,

வெறும் உடலை பிரித்து என்ன
செய்வார்கள் என்று  சொன்னாய்,
பிரிவு  காதலில் இன்பம்தான் என்றாய்,

பரிவு என்னும் பரிதி மறைவதில்லை,
காதல் என்றும் உலகில் அழிவதில்லை.,