வாழ்க்கை கவிதை
அரும்பு மீசையும், புரியா ஆசையும்
துளிர்த்து வரும் காலம் அது,
முதல் காதலும், முடியா தேடலும்,
இதயத்தில் தோன்றும் காலம் அது,
நாள்தோறும் மாற்றமும், நாகரிக தோற்றமும்,
வாழ்வில் தொடங்கும் காலம் அது,
கனவு உலகமும், கற்பனை உறவுகளும்,
மனதில் பிறக்கும் காலம் அது,
அது துள்ளி திரிந்த பருவக்காலம்,
அருமையான கவிதை நண்பரே
ReplyDeleteநன்றி நட்பே.....
ReplyDelete