13 February 2018

வெளிநாட்டு வாழ் இளைஞன்


இயற்கை கவிதை : வெளிநாட்டு வாழ்                                                   இளைஞன்

முன்னோர் வாழ்ந்த ஊர்,
முப்போகம் விளைந்த ஊர்,
சிறுவயதில் வந்தது,
சிறுசிறு மீன்கள் பிடித்து விளையாடியது,
பசுமைமாறா நினைவுகள் கொண்டது,

பலவருடம் கழித்து வந்தேன்,
இரவுநேர பயணம்,

நதியில் மீன் பிடிக்க
நண்பகலில் சென்றேன்,
வலையை மறந்தேன் என்று
நடுவழியில் தோன்றியது,


துரத்தில் ஒர் வீடு,
தென்னை ஒலையால் மேய்ந்த வீடு,
திண்னையில் ஒர் ஆடு - அதன்
அருகில் மீன் வலை,

திரும்பி சென்றால் வெகுநேரம்
எடுத்து வந்தால் சிலகணம்,

எடுத்தேன் வலையை
திகில் உடன்
திரும்பி கூட பார்க்கமால்
வேகமாக நடந்தேன்,

நதி அருகில் செல்ல செல்ல
தென்றல் தீண்டியது,
நாடி நரம்பு சிலிர்த்தது,

நதிமேடு, அதில் ஏறி நின்றேன்,
சுடுகாடு போல் அமைதி கண்டேன்,

பாதையெல்லாம் பள்ளம்,
பார்க்கும் தூரமெல்லாம் பள்ளம்,

கரைபுரண்டு ஒடியது தண்ணீர் அன்று
கண்ணில் மட்டுமே நீர் இன்று.....

2 comments:

  1. வருந்துகிறேன். ..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..
      கருத்திற்கும் நன்றி சகோதரா....

      Delete