வண்ணச்சிறகை விரித்து,
வாசல்வழி சென்று,
விருந்தோம்பல் ஏற்கும்
வண்ணத்துப்பூச்சியே!!
அனைவர் அழைப்புக்கும் செல்கிறாய்,
அமுதுதேன் உண்கிறாய்,
அன்பாக அரவணைக்கிறாய்,,
-
சூதுவாது தெரியாத பட்டாம்பூச்சியே!!
நடக்கும் நாடகம் புரியவில்லை உனக்கு,
நடப்பதை அறிந்தும் சொல்லதெரியவில்லை எனக்கு,
பூவும் உறவும் ஒன்று தான்,
காரியம் ஆகும்வரை உபசரிப்பு,
காரியம் வேண்டுமென்றால் தான் மறுஅழைப்பு

Conjectura sobre futuro dessa criança na Era Virtual.
ReplyDelete