16 February 2019

வளர்பிறை

பூங்காற்றே என்வாசல் தேடி வந்தாய்,
வெண்மதியே என்வீடு தேடி வந்தாய்,

உன்வருகையால் 
முகில்களெல்லாம் முத்துதூரல் பொழிகிறது ,
நட்சத்திரங்களெல்லாம் பூவாக பொழிகின்றது ,
கண்களில் மீண்டும் கண்ணீர் புன்னகையுடன் சிந்துகிறது ,
இரத்த கடிதங்கள் நெருப்பில் எரிந்து முத்த கவிதைகள் பிறக்கின்றது ,

அடியே !!
உன்பிரிவால் நானடைந்த காயமெல்லம் மாயமாகி சென்றதடி ,
உன்வருகையால் எந்தோட்ட பூக்களெல்லாம் இன்பமாகி சிரிக்கின்றதடி .

No comments:

Post a Comment