30 November 2018

பத்து திங்கள்




பத்து திங்கள் பொத்தி வளர்த்த
பொக்கிஷா திங்களே!!
பரந்து விரிந்த உலகத்தில் வாழ்வதற்கு ,
பகுத்தறிவும் பக்குவமும் வேண்டுமடி,

இனியவளே!!
இடுக்கண் கலைந்து இதயத்தில் சுமந்து ,
இமை நேரத்திலும் மாறாததே நட்படி ,
மற்றவையணைத்தும் இதழின் சாயமடி   ...   

இக்கரைக்கு அக்கரை பச்சையடி ,
இன்றுவரை சிலபார்வை
கோணங்கள் மாறவில்லையடி ,,
குறையுள்ளவர் கண்களில்
அணைத்தும் குறைதானடி - ஆனால்
அனைவர் கண்களும் குறையகாதடி.....

பாலில் விஷமிருந்தால்
பார்வைக்கு தெரியாதடி ,
புலியின் வேசம் கலையும் வரை
பசு போல் பாசம் தொடருமடி,

கண்ணே  இது !!
காலத்தின் சூழ்ச்சியடி ,
கலசாரத்தின் வீழ்ச்சியடி ,
அறிவுரை இல்லையடி ,
அக்கறை தானடி ,
அன்னப்பறவை போல்  வாழ்ந்துக்கொள்ளடி .......

29 November 2018

என் காதலா




நீ சென்ற பாதையெல்லாம்,
  என் பாதம் பதியுதடா;
என் விழியின் அம்பு யாவும்,
  உன் இதயம் துளைக்களயடா,,

உன் நுனியுடன் என் நுனி   தீண்டும் போது
உன் சுவாசத்தை களவு செய்ய வேண்டுமடா,
என் இதழுடன் உன் இதழ் சேர்க்கும் போது
என் சாயத்தை திருடிச் செல்ல வேண்டுமடா,
 
உன் அருகே நான் அமர,
உன் தோளில் என் கை பட,
வழிநெடுகிலும் யாவும் மறக்க,
பயணம் போக வேண்டுமடா,,,

என் அருகே நீ அமர,
என் மடியில் உன் தலை சாய,
விழி தூரங்களும் முடி மறைக்க,
ஆயணம் செய்து வர  வேண்டுமடா...........