2 April 2018

கண்ணீர் பரிசு



கவலையில்லா வண்ணபூக்கள்

காலில் மீதிபட்டு அழிவது ஏனோ,

சிறு எறும்புக்கும் தீங்கு செய்யாத

சிறார்கள் சிதைவது ஏனோ,


விதிக்கு வந்து நாய்கள் அலைகின்றன,

வேட்டைகாரன் துங்கிவிட்டனோ -இல்லை

பிணத்தை சாப்பிட்டு சலித்துவிட்டதோ,


எத்தனை தெய்வங்களும் இருந்தும்

இவர்களை காக்க யாருமில்லையா,


வண்டு கூட தீண்டாது மலராத மொட்டுகளை,

நண்டு போல் காத்திருந்து கயமை செய்வது ஏனடா,


கள்ளம் கபடமற்ற கடவுளின் பிம்பங்களுக்கு

கண்ணீர் பரிசுகளை தருவதா ,

விண்னை வெல்லவும் நம்பிக்கை தருவோம்,


இனியவது ஒன்றுபடுவோம்,

ஒழுக்கத்தை போதிப்போம்........

No comments:

Post a Comment